ரிஷாத் பதியுதீனுக்கு புனர்வாழ்வு அமைச்சு கொடுத்து அகதிமுகாமுக்குள் விட்டதால் தான் இவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் -video
- ரிஷாத் பதியுதீனுக்கு புனர்வாழ்வு அமைச்சு கொடுத்து அகதி முகாமுக்குள் விட்டதால் தான் இவ்வளவு காணாமல் ஆக்கப்படடோர் ,,
- முஸ்லீம்களால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட படுகொலைக்கு விசாரணை வேண்டும்
இலங்கை நாடு ஒரு ஜனநாயக நாடோ, இறமை உள்ள நாடோ இல்லை. ஜனநாயக நாடு என்றால் இன விகிதாசர அடிப்படையில் பொலிஸ், படையினர், நீதித்துறை ஆகியன இருக்கவேண்டும். ஆனால் இங்கே அது கிடையாது.
1983 இனக்கலவரத்தினால் என்னுடைய சகோதரன் புத்திசுவாதீனத்தை இழந்தார்.
அடுத்தடுத்து வந்த காலங்களில் மருத்து தட்டுப்பாடு காரணமாக என்னுடைய இரு சகோதரிகள் மற்றும் தாயை இழந்தேன்.
இதற்கு நீதி வேண்டும் என கேட்டு இப்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன்.
அவர் எனக்கு பதில் எழுதியிருக்கின்றார். வீடு தருவதாக எந்த பிறவியில் அவர் எமக்கு வீடு கட்டி கொடுக்கப்போகிறார்?
சலாவ இராணுவ முகாமில் ஆயுத கிடங்கு வெடித்த சம்பவத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு ஜனாதிபதி 50 ஆயிரம் ரூபா வாடகை கொடுக்கிறார்.
அதே ஜனாதிபதி வலி,வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் வந்தார். அந்த மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாரா? என்றால் இல்லை. எனவே இனத்துவேசம் கொண்ட ஒரு ஜனாதிபதியாகவே அவர் இருக்கிறார்.
சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் தமிழர்களுக்கு ஒரு நீதியுமே இங்கு வழங்கப்படுகின்றது,தமிழருக்கு நடந்தால் அவற்றுக்கு இழப்பீடு என்பதே கிடையாது.
இந்த நாடு அழியும் ஒரு நாடு. இந்த நாட்டை நான் ஒருபோதும் ஆசீர்வதிக்கப்போவதில்லை
பாதிக்கப்பட்ட சகல தரப்புகளுக்கும் உரிய இழப்பீடும் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும்வரை இங்கு நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை
ரிஷாத் பதியுதீனுக்கு புனர்வாழ்வு அமைச்சு கொடுத்து அகதிமுகாமுக்குள் விட்டதால் தான் இவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் -video
Reviewed by NEWMANNAR
on
August 08, 2016
Rating:

No comments:
Post a Comment