தங்களுக்குத் தேவையான காணிகளை படையினர் சுவீகரிப்பர்! யாழ்.கட்டளைத் தளபதி
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய சில காணிகள் பகுதி பகுதியாக மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க, மேலும் சில மக்களுடைய காணிகளை படையினர் தங்கள் தேவைகளுக்காக சுவீகரிப்பார்கள் எனவும் அதற்காக இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் வலி.வடக்கில் காணி இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை சீமெந்து தொழிச்சாலை காணி வழங்கப்பட்டு, காணிகளுக்கான ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கீரிமலை பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நிகழ்வில் அவர் உரையாற்றுகையில்,
Soldiers take the land for themselves! Jaffna Commander
கடந்த 6 மாதங்களாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து இந்த மீள்குடியேற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இயங்கி கொண்டிருக்கின்றேன்.
இந்த நடவடிக்கையின் ஜனாதிபதியின் ஒத்துழைப்புடன் சில நன்மைகளை பெற்றுக் கொடுத்தும் இருக்கிறேன். இந்த பிரச்சினையில் காணி இல்லாத மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கும் நடவடிக்கையே இப்போது மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் அரசாங்கம் காணி மற்றும் வீட்டு திட்டத்தை உங்களுக்கு வழங்குவதற்கான உத்தரவாதமே இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் வீடுகளையும் நீங்கள் பெற்று கொள்ள உள்ளீர்கள். மேலும் ஜே.233, ஜே.234, ஜே.235, ஜே.236, ஜே.250, ஜே.247 ஆகிய பகுதிகளில் 2 படைமுகாம்கள் அமைந்துள்ள காணிகள் தவிர்ந்த மற்றைய காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
மேலும் படையினர் சிறிது காலம் இருக்கவேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. இதேபோல் பலாலி போன்ற சில பகுதிகளை படையினர் சுவீ கரிக்கவுள்ளனர்.
அதற்காக அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு மிக பெயரிய நஸ்டஈடு வழங்கப்படவுள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்த பிரச்சினை அனைத்தும் தீர்க்கப்படும் என்றார்.
தங்களுக்குத் தேவையான காணிகளை படையினர் சுவீகரிப்பர்! யாழ்.கட்டளைத் தளபதி
Reviewed by Author
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment