ஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ்: இவர் மனிதரா? இல்லை மாமிச மலையா?
மலேசியாவின் சிபு பகுதியைச் சேர்ந்த சியா ஜி ஹெர்ங்கின் உடல் பருமனை கண்டு பலர் திகைத்து போய் உள்ளனர்.
குறித்த நபர் கடந்த 10 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் 10.5 கிலோ (30 பவுல்ஸ்) நூடுல்ஸை சாப்பிட்ட பிறகு 12 க்கும் மேற்பட்ட மில்க்ஷேக்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பினை மேற்கொண்டு உள்ளார். இதன்போது அங்கு வந்த மீட்பு குழுவினர் 250kg உடல் பருமன் கொண்ட இவரினை கண்டு திகைத்து போய் உள்ளனர்.
இது தொடர்பாக மீட்பு மற்றும் தீயணைப்புத்துறைகள் உதவிப்பணியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பு வந்து ஒரு மணி நேரத்தில் ஹெர்ங் வசிக்கும் இடத்திற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாங்கள், 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் இவரை அந்த அறையினுள் இருந்து வெளியில் கொண்டு வந்தோம்.
எனினும் இவருடைய நிலையில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றமுடியவில்லை, இதற்காக பாரம் தூக்கும் லொறி ஒன்றை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்துடன் மருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக சியாவின் தாய் கூறுகையில்,
அதிகமாக சாப்பிடுவதால் இது போன்ற பிரச்சினை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்பாக ஸ்டிக் உதவியுடன் மெல்ல மெல்ல நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சியா ஜி ஹெர்ங்கின் உடல் நிலை கடந்த மூன்று நான்கு வருடங்களாக மோசமடைந்து வந்துள்ளதால்அதிக நேரம் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, சியா ஜி ஹெர்ங்கின் நண்பர் ஒருவர் அவருக்கு படங்கள் பார்ப்பது, விளையாட்டு நிகழ்வுகள் பார்ப்பது தான் அதிகம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ்: இவர் மனிதரா? இல்லை மாமிச மலையா?
Reviewed by Author
on
September 25, 2016
Rating:

No comments:
Post a Comment