அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார்: சொன்னது யார் தெரியுமா?


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆலன் லிச்மேன் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் இவரது கணிப்பு பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற 8 தேர்தல்களில் யார் இறுதியாக வெள்ளை மாளிகைக்கு செல்வார்கள் என்பதை ஆலன் மிகச்சரியாக கணித்து கூறியது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

அதாவது, ஆலன் கூறிய 8 வேட்பாளர்கள் தான் இதற்கு முன்னர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நிச்சயமாக ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என கணித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு 13 முக்கிய தகுதிகள் தேவை. இவை அனைத்தையும் டொனால்ட் ட்ரம்பிடம் தான் பார்ப்பதாக ஆலன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு ஹிலாரி கிளிண்டனுக்கு வலிமை போதாது.

ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு பிறகு அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்தி அலைகள் அனைத்தும் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வாக்குகளாக மாறும் என ஆலன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார்: சொன்னது யார் தெரியுமா? Reviewed by Author on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.