நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொன்ற பெற்றோர்
கனடா நாட்டில் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொலை செய்த குற்றம் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
கல்கேரி நகரில் Emil மற்றும் Rodica Radita என்ற பெற்றோர் தங்களது 8 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டில் Alex Radita என்ற குழந்தைக்கு நீரிழிவு நோய் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு நோயை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், குழந்தையின் எடை குறைந்துக்கொண்டு சென்றுள்ளது.
2013ம் ஆண்டு சிறுவனுக்கு 15 வயது ஆகும் வரை கடுமையான போராட்டத்தை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், அதே ஆண்டு மே மாதம் மகனை பெற்றோர் ஒரு அறையில் பூட்டி அடைத்து வைத்தாக கூறப்படுகிறது.
மேலும், மகனுக்கு கொடுக்க வேண்டிய இன்சுலீன் மருந்து உள்பட உணவும் கொடுக்கப்படவில்லை. இதே நிலையிலேயே பசி மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பொலிசார் சிறுவன் உடலை பரிசோதனைக்கு அனுப்பியபோது சிறுவன் 17 கிலோ மட்டுமே இருந்துள்ளான்.
சிறுவனை திட்டமிட்டு சிகிச்சை மற்றும் உணவு கொடுக்காத பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனினும், கடந்த 3 ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ள நிலையில், இந்த வார இறுதிக்குள் நீதிபதி தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொன்ற பெற்றோர்
Reviewed by Author
on
September 13, 2016
Rating:

No comments:
Post a Comment