மன்னார் மண்ணின் கவிஞர் பெனில் அவர்களுக்கு...... இரா.உதயணன் இலக்கிய விருது
இலங்கை தமிழ் இலக்கிய நிருவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிருவகமும் இணைந்து வழங்கிய இரா .உதயணன் இலக்கிய விருது -2015 வழங்கல் நிகழ்வில் கவிதை இலக்கியத்துக்காக சிறந்த இளம் படைப்பாளி விருதினையும் சான்றிதலையும் பண பரிசினையும் பெற்றுக்கொண்டார்
கொழும்பு மாவட்டத்தில் இருந்து கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி இலக்கியப்பணியினை செவ்வனே ஆற்றிவரும் இலங்கை தமிழ் இலக்கிய நிருவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிருவகமும் முயற்சியால்… வருடாவருடம்....
நாவல்-சிறுகதை-கவிதை-சிறுவர் இலக்கியம்-ஆய்வியல்-மொழிபெயர்ப்பு அயலக படைப்புக்கள் போன்று வெளிவரும் நூல்களில் இருந்து சிறந்த நூல்களுக்கான அத்தோடு இளம் படைப்பாளிகள் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது
தாயக ஒலி சிறப்பு வாசகர் விருது இனநல்லுறவுக்காகவும் இலக்கியத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மூத்த கலைஞர்கள் சமூக ஆர்வலர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதும் பொற்கிளியும் பாராட்டுச்சான்றிதலும் வழங்கி வருகின்றது.
இம்முறையும் கொழும்பு தமிழ் சங்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 10-09-2016 சனிக்கிழமை மாலை 4-30 மணியளவில் 25வது தாயக ஒலி சிறப்பு மலர் வெளியீடும் இரா.உதயணன் இலக்கிய விருது பேராசிரியர் சபா,ஜெயராசா தலைமையில் பிரதமவிருந்தினராக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சி,தண்டாயுதபாணி அவர்களுடன் கல்வியலாளர்கள் கவிஞர்கள் புரவலர்கள் அயல் நாட்டு கலைஞர்கள் கல்விமான்கள் ஆர்வலர்கள் பொதுநிலையினர் எனபலரும் கலந்து சிறப்பித்தனர் பிரமாண்டமான அளவில் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மண்ணின் வாழும் கவிஞர் மாற்றுத்திறனாளி பெனிலின் இலக்கியப்பணியில் தன்னை மன்னார் பெனில் எனும் புணைபெயரில் இணைத்து செயலாறி வருகின்றார்.
இவரது இலக்கியப்படைப்புக்களாக........
- வலியின் விம்பங்கள்-2012
- ஈரநிலத்தை எதிர்பார்த்து-2015
இலங்கை தமிழ் இலக்கிய நிருவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிருவகமும் அவர்களுக்கும் இரா .உதயணன்அவருடன் இணைந்து இப்பணியைச் செய்துவரும் அத்தனை பேருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்னார் மண்ணின் கவிஞர் பெனில் அவர்களுக்கு...... இரா.உதயணன் இலக்கிய விருது
Reviewed by Author
on
September 13, 2016
Rating:

No comments:
Post a Comment