தொடர்ச்சியாக 16 வெற்றி: சாதனையை சமன் செய்த ரியல் மாட்ரிட் அணி....
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்ற ரியால் மாட்ரிட் அணி, பார்சிலோனா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியல் மாட்ரிட் அணியும், எஸ்பேன்யால் அணிகளும் மோதின.
இதில் ரியல்மாட்ரிட் அணி சார்பில் ரோட்ரிகஸ் ஒரு கோல் முதல் பாதியிலும், பென்ஸீமா இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.
கடைசி வரை போராடிய எஸ்பேன்யால் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு ஸ்பெயின் லீக்கில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2010-11 சீசனில் பார்சீலோனா அணி தொடர்சியாக 16 வெற்றிகளை பெற்றிருந்தது. அச்சாதனையை தற்போது ரியல் மாட்ரி அணி சமன் செய்துள்ளது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முன்னணி வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல் ஆகியோர் இல்லாத நிலையில் எஸ்பேன்யால் அணியைத் தோற்கடித்துள்ளது ரியல்மாட்ரிட் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 16 வெற்றி: சாதனையை சமன் செய்த ரியல் மாட்ரிட் அணி....
Reviewed by Author
on
September 20, 2016
Rating:

No comments:
Post a Comment