அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் பேரணி நடத்துவது தீர்வை வலியுறுத்த உதவும்

போருக்குப் பின்பான ஆட்சி மாற்றம் என்பதில் தமிழ் மக்களின் வகிபங்கு காத்திரமானது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.


ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவரின் இன்றையநிலை என்னவாக இருக்கும் என்பதை அவரே பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில் இப்போது இந்த நாட்டில் நடப்பது நல்லாட்சி என்றால், அந்த நல்லாட்சியை ஏற் படுத்தியவர்கள் தமிழ் மக்கள் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

இருந்தும் நல்லாட்சி இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கால அவகாசம் தேவையயன்றால் அதில் நியாயம் உண்டு என்பதில் மறுகருத்துக்கு இடமில்லை.

அதேநேரம் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருக்கக்கூடிய இராணுவத்தை வெளியேற்றுவது; சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது; காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவது; வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வது என்ற விடயங்களில் எந்த இடைஞ்சல்களும் இருக்க முடியாது.

மாறாக இவற்றைச் செய்வதற்கும் தென்பகுதிப் பேரினவாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்று நல் லாட்சியினர் காரணம் சொல்வார்களாயின் தமிழ் மக்களின் வாக்குகளை அவர்கள் கோராமல் இருந்திருக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவரால் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை என்றால், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆக, காலம் கடத்துதல் என்பது மட்டுமே இன்றைய நல்லாட்சியிலும் கடைப்பிடிக்கப்படும் விடயமாகவுள்ளது.

ஆகையால் அதற்கொரு முடிவுகட்டாமல் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று அவர்களை அவசரப்படுத்தாமல் - பேசாமல் இருந்தால் எதுவும் நடக்காதென்பதே உண்மை.

தமிழ் மக்கள் தங்கள் நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்தினால் அது அரசு முன்னெடுக்கும் தீர்வு விடயங்களை பாதிக்கும் என்று கருத்துரைப்போர் அரசின் விசுவாசிகள் மட்டுமன்றி தமிழினத்தின் விரோதிகள் என்பதையும் கூறித்தானாக வேண்டும்.

ஏனெனில் இத்தகைய கருத்தைக் கூறுவோர் நிச்சயமாக சிறைகளில் வாடும் நம் பிள்ளைகளின் அவலநிலையையோ அல்லது காணாமல் போனவர்கள் துன்பநிலையையோ அல்லது முகாம்களில் வாடுகின்ற மக்களின் பரிதாப நிலையையோ உணராதவர்கள் என்றே கூறவேண்டும்.

தங்கள் குடும்பத்துத்துப் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் அல்லது வன்னி பெருநிலப்பரப்பில் இறந்திருந்தால், அகதி முகாம்களில் வாழ்ந்திருந்தால் மேற்போந்த கருத்துக்களை அவர்கள் ஒரு போதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது உண்மை.

அதேநேரம் எங்கள் பிரச்சினைகளை முன் வைத்து அகிம்சை வழியில் நாம் பேரணி நடத்தும் போது, அந்தப் பேரணியானது தமிழ் மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆறப்போடாமல் உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற ஒரு நினைப்பை அரசிடம் ஏற்படுத்தும்.

அதிலும் நல்லாட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கையை திரண்டெழுந்து அரசிடம் முன்வைப்பது; சர்வதேச சமூ த்திடம் தெரிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதே நம் தாழ்மையான கருத்து.
தமிழ் மக்கள் பேரணி நடத்துவது தீர்வை வலியுறுத்த உதவும் Reviewed by NEWMANNAR on September 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.