யாழ்ப்பாணம் பளையில் கோர விபத்து - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்
பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பஸ்ஸிடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பஸ்ஸிடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 7 பேரில் 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதனால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் குறித்து பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
யாழ்ப்பாணம் பளையில் கோர விபத்து - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்
Reviewed by Author
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment