மன்னார் குஞ்சுக்குளம் நுழைவாயில் திறந்து வைப்பு .....
மன்னார்-மதவாச்சி பிரதான வீதில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் நேற்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குஞ்சுக்குளம் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் திறப்பு நிகழ்வு,குஞ்சுக்களம் பங்குத்தந்தை அருட்தந்தை இ.அன்ரனி சோசை தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா, மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி, கிராம மக்கள், கிராம அலுவலகர் ஆகியோர் இணைந்து குறித்த நுழைவாயிலை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
மன்னார் குஞ்சுக்குளம் நுழைவாயில் திறந்து வைப்பு .....
Reviewed by Author
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment