நிலத்துக்கு அடியில் பிடிபட்ட 400 கிலோ ராட்சத அனகோண்டா: பிரேசிலில் பரபரப்பு....
பிரேசிலில் நிலத்துக்கு அடியில் 400 கிலோ எடையுள்ள ராட்சத அனகோண்ட பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரேசிலின் அல்டமிரா என்ற பகுதியில் அமைந்துள்ள பிலோமோண்டி அணையில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கட்டுமானத்தொழிலாளர்கள் நிலப்பரப்பை அகலப்படுத்துவதற்காக வெடிவைத்து தகர்க்கும் போது, நிலத்துக்கு அடியில் உள்ள குகையில் ராட்சத அனகோண்டா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் ராட்சத கிரேன் கொண்டு அனகோண்டாவை வெளியில் எடுத்தனர். அதை அங்கிருந்த தொழிலாளர்கள் அளந்து பார்க்கையில் சுமார் 33 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது என தெரிவித்தனர்.
ஆனால் அனகோண்ட இறந்துவிட்டதா அல்லது உயிருடன் தான் உள்ளதா என்ற சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இக்காட்சியை கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிலத்துக்கு அடியில் பிடிபட்ட 400 கிலோ ராட்சத அனகோண்டா: பிரேசிலில் பரபரப்பு....
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment