மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய ‘A Living Hero’ (ஓர் வாழும் நாயகன்) நூல் வெளியீடு......
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று இன்று வியாழக்கிழமை 01.09.2016 மாலை 3.00 மணிக்கு மன்னார் குடும்பநல பொதுநிலையினர் பணியக மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
அருட்திரு கலாநிதி வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் எழுதிய
‘A Living Hero’ -ஓர் வாழும் நாயகன் என்ற பெயரைக் கொண்ட இந்த ஆங்கில நூலானது மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எழுதிய சில ஆவணங்களினதும் அவரைப்பறறி எழுதப்பட்ட சில ஆவணங்களினதும் தொகுப்பாக அமைந்துள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக...................................
மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைக்கோட்ட முதல்வர்கள் சர்வமதத் தலைவர்கள் மற்றும்
கௌரவ விருந்தினர்களாக.......................................
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல்
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் ஆகியோருடன் அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் துறவியர்கள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக....
மன்னார் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்காவும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி மிகவும் மோசமான காலப்பகுதியிலும் தனது உயிரை பணையம் வைத்து துணிச்சலுடன் குரல் கொடுத்தார் மட்டுமன்றி தன்னால் முடிந்த வரை யுத்தம் முடிந்து தமிழர்களின் தலைவிதி ஊசலாடிக்கொண்டிருக்கும் போது தனியொருவனாக நின்று அத்தனை தடைகளையும் தகர்த்து சர்வதேசம் வரை தமிழன் பிரச்சினை பறைசாற்றினார் பல சவால்களுக்கு முகம் கொடுத்துஅன்று முதல் இன்று வரை சமயப்பணியோடு சமூகப்பணியும் ஒரு இனத்தின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்பணித்து செயற்பட்ட உண்மையான ஓர் வாழும் நாயகன் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்.
ஆங்கில நூல் ஆக இருந்தாலும் எமது ஆயரின் சேவையை ஆற்றிய பாரிய சாதனைகளை இனிவரும் சமூதாயமும் சந்ததியினரும் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள இன்னும் பல தகவல்கள் உள்ளடக்கப்பட்டு முழுமையான தொகுப்பாக வெளிவரவேண்டியது ஆவணமாக்க வேண்டியது காலத்தின் தேவையும் நாமது கடமையும் நன்றியுணர்வும் ஆகும்.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் மன்னார் பிரதேச செயலாளர் மன்னார் நகரசபைச்செயலாளர் அதிகாரிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்வியதிகாரிகள் கலந்து கொண்டதோடு வரவேற்பு நடனம் மற்றும் சிறப்பு நடனம்களை பரதக்கலாலயா மாணவிகளின் சிறப்பான நடனங்களுடன் நிகழ்ச்சியினை பி.அருள்ராஜ் தொகுத்து வழங்க மிகவும் சிறபாக நிறைவு பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல்வெளியீடு....
-வை-கஜேந்திரன் -

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய ‘A Living Hero’ (ஓர் வாழும் நாயகன்) நூல் வெளியீடு......
Reviewed by Author
on
September 01, 2016
Rating:

No comments:
Post a Comment