கனடிய பிரதமருடன் கை குலுக்க மறுத்த பிரித்தானிய குட்டி இளவரசர்
கனடா நாட்டிற்கு பெற்றோருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானிய நாட்டு குட்டி இளவரசரான ஜோர்ஜ் கனடா நாட்டு பிரதமருடன் கை குலுக்க மறுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கனடா நாட்டிற்கு அரசு முறை பயணமாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியவரும் தங்களுடைய பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லோட்டுடன் சென்றுள்ளனர்.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று வந்த அரசு குடும்பத்தினரை கனடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, இளவரசர் வில்லியம் அருகில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் நின்றுக்கொண்டு இருந்துள்ளார்.
குட்டி இளவரசரை நெருங்கிய ட்ரூடோ அவர் முன்னிலையில் மண்டியிட்டு அமர்ந்து high five கேட்டுள்ளார். ஆனால், இதற்கு குட்டி இளவரசர் தனது தலையை ஆட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
உடனடியாக low five கேட்டும் குட்டி இளவரசர் மறுக்க இறுதியாக கை குலுக்க ட்ரூடோ தனது கையை நீட்டியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையும் ஜோர்ஜ் மறுத்துவிட ஏமாற்றத்துடன் ட்ரூடோ எழுந்துள்ளார்.
கனடிய பிரதமருக்கு குட்டி இளவரசர் கை குலுக்க மறுத்துள்ள இந்த சம்பவம் அங்கு திரண்டிருந்த அதிகாரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
கனடிய பிரதமருடன் கை குலுக்க மறுத்த பிரித்தானிய குட்டி இளவரசர்
Reviewed by NEWMANNAR
on
September 27, 2016
Rating:

No comments:
Post a Comment