வவுனியா, மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
வவுனியா, மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
தனியார் பேருந்து ஒன்றின் முன்னால் வேகமாகச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிறுத்தியபோது அதனை விலத்தி முந்திச் செல்ல முற்பட்ட தனியார் பேருந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.
இதேவேளை, விபத்து இடம்பெற்றதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பெரியதம்பைனையைச் சோந்த ஏ.இராமசந்திரன் (வயது 64) என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
வவுனியா, மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
September 27, 2016
Rating:

No comments:
Post a Comment