அண்மைய செய்திகள்

recent
-

கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை கண்டனம்....


இந்தியா- கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்களை பாதுகாப்பதற்கு தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் முதலமைச்சர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் மேற்படி விடயம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோர் மேற்படி கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன், நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் குறிப்பிடுகையில்,

கர்நாடக நதி நீர் பிரச்சினையை தொடர்ந்து கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தின் தலைவர் தாமோதரம்பிள்ளையுடன் பேசியிருந்தோம். அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நிலைமை தொடர்ந்தும் பதற்றமாக உள்ளதாகவும், படையினர் மற்றும் மேலதிக துணைப்படையினர் அழைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுள்ளார்கள்.

கர்நாடக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிகம் குரல் கொடுத்தவர்கள்.

அந்தவகையில் அங்கே அவர்கள் தாக்கப்படுகின்றபோது அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமை ஈழ தமிழர்களுக்கு உள்ளது.

அந்தவகையில் ஈழ தமிழர் சார்பில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன்,

இந்த விடயத்தில் இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என கோரினர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக நாளை வடக்கில் உள்ள அனைத்துக்கட்சிகளையும் கூட்டி தீர்மானம் ஒன்றை எடுத்து அதனை இந்திய தூதரகம் ஊடாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் ஊடாக இரு மாநிலங்களினதும் முதலமைச்சர்கள் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை கண்டனம்.... Reviewed by Author on September 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.