அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்' பதவிக்கு விண்ணப்பித்த தகமையுள்ள பலரது விண்ணப்பங்கள் நிராகரிப்பு-விண்ணப்பதாரிகள் கவலை-Photos

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தில் 'வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்' தரம் 3 இற்கு ஆட்சேர்த்து கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்த பல்வேறு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தகுதி இருந்தும் 7 மாதங்களை கடந்த நிலையில் தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 இற்கு ஆட்சேர்த்து கொள்ளுவதற்கான திறந்த போட்டி பரிட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பம் கோரப்பட்ருந்த நிலையில் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத்திகதியாக அறிவிக்கப்பட்டு,பின் மேலும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரீட்சை கட்டணமாக 500 ரூபவினை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி சேகரிப்பு கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டுக்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு போட்டி பரிட்சைக்கு அனுமதி வழங்குவதற்கு முன் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மன்னாரில் போட்டி பரிட்சைக்கான கருத்தரங்குகள் கட்டணம் பெற்றுக்கொள்ளப்பட்டு விண்ணப்பதாரிகளுக்கு நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுமார் 7 மாதங்கள் கழிந்த நிலையில் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப்பரிட்சைக்கான கடிதம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டு வருகின்றது.
குறித்த கடிதத்தில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் விசனம் தெரிவித்தள்ளனர்.

விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ,,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 இற்கு ஆட்சேர்த்து கொள்ளுவதற்கான திறந்த போட்டிப்பரிட்சை-2016 என குறிப்பிட்டு,2016 ஜனவரி மற்றும் 2016 ஜனவரி 29 ஆம் திகதியில் முறையே இலக்கம் 1950 மற்றும் 1952 என்ற இலக்கங்களையுடைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மேற்படி பதவியில் ஆட்சேர்த்துக் கொள்ளும் வர்த்தமானி விளம்பரத்திற்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் தொடர்பில்,வர்த்தமானி விளம்பரத்திற்கு அமைவாக தாங்களினால் முன் வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கீழ் குறிப்பிடப்படும் தகுதிகளை பூர்த்தி செய்யாததன் காரணத்தினால் தங்களது விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படுகின்றது.

என குறிப்பிட்டு விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக குறிப்பிட்ட கல்வித்தகமையை பூர்த்தி செய்யவில்லை,35 வயதை தாண்டியிருத்தல்,குறிப்பிட்டிருந்த பரீட்சைக்கட்டணம் செலுத்தப்படாமல் காணப்பட்டமை,மற்றும் கல்விச்சான்றிதல்களின் பிரதிகள் சமர்ப்பிக்கப்படாமை போன்ற 4 காரணங்கள் குறிப்பிடப்பட்டு புள்ளடி இடப்பட்டு விண்ணப்பதாரிகள் பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-மேலும் சகல தகமைகளும் உள்ள பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறித்த விண்ணப்பதாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள 'சில வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு' உரிய கல்வித்தகமைகள் இல்லாத நிலையில் அவர்கள் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ள போதும்,தகுதி உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அரசியல் பின்புலத்தின் மத்தியில் மீண்டும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையாக காணப்படுவதாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையத்தில் தமிழ் அரசியல் தலைமைத்துவம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.


மன்னாரில் 'வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்' பதவிக்கு விண்ணப்பித்த தகமையுள்ள பலரது விண்ணப்பங்கள் நிராகரிப்பு-விண்ணப்பதாரிகள் கவலை-Photos Reviewed by NEWMANNAR on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.