அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சர் தலைமையிலான குழு இரணைமடுவுக்கு விஜயம்! (குளச் சீரமைப்பு தடை நீங்கியது)


வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழமை இரணைமடு குளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும், அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

நேற்று மாலை இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நீர்ப்பாசனத் திணைக் கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விளக்கங்களை கேட்டறிந்துகொண்ட பின்னர் நேரடியாக குளத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.


இரணைமடுகுளத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த அபிவிருத்திக்கு தேவையான மணலை குளத்தின் நீரேந்து பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மூன்று திணைக்களங்களான வனவளத் திணைக்களம், கனியவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தடை ஏற்படுத்தியமையினால் அபிவிருத்திப் பணிகளுக்கு தடை ஏற்பட்டது. பெரும் சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக தடை நீக்கப்பட்ட நிலையில் தற்போது மணலை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சரால் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் இவ்வா றான விடயங்களை உடனடியாக எனது கவனத்திற்கோ அல்லது எனது செயலாளரின் கவனத்திற்கோ கொண்டு வாருங்கள் நீங்கள் எங்களை வருத்தினாலும் பரவாயில்லை. பிரச்சினைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் அதனை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில் அதிகாரிகள் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ளும் போது அதனை கையாள உயர்மட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்களே உரிய திணைக்களங்கள் அல்லது அரசாங்கத்துடன் அல்லது அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு கிட்டும் எனத் தெரிவித்த முதல மைச்சர் இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்ணம், சிவா ஜிலிங்கம், தவநாதன், முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் விவசாய அமைச்சின் செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் தலைமையிலான குழு இரணைமடுவுக்கு விஜயம்! (குளச் சீரமைப்பு தடை நீங்கியது) Reviewed by NEWMANNAR on September 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.