அண்மைய செய்திகள்

recent
-

மலேசியாவில் விடுதலை புலிகளா? பாராளுமன்றத்தில் சூடான விவாதம்!


மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார், அங்கு தாக்குதலில் ஈடுபட்டது விடுதலை புலிகளின் ஆதரவாளர்களும் மறைந்துள்ள விடுதலை புலிகளுமே. அதே சமயம் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

மேலும் மலேசியாவில் ஏன் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசு செயற்படவில்லை, தற்போது தாக்குதல் தொடர்பில் எவ்வகையான தீர்மானங்களை அரசு கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இன்றைய தினம் பாராளுமன்றம் ஒன்று கூடிய போதே அவர் இத்தகைய கேள்வியை முன்வைத்தார்.

அவரது இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் போதியளவு வசதிகளையும் பாதுகாப்பினையும் செய்து கொடுக்க இலங்கை அரசும் வெளிவிவகார அமைச்சும் செயற்பட்டு கொண்டே வருகின்றது.

மேலும் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவர் எங்கு சென்றாலும் தகுந்த பாதுகாப்பிற்கு வழங்குவதற்கு அவர் செல்லும் நாடுகளுடன் இணைந்து நாம் செயற்பட்டு கொண்டே வருகின்றோம் அதில் எந்த வித குறைபாடுகளையும் இலங்கை அரசு வைக்கவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மலேசியா நாட்டில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சம்பந்தப்படவில்லை, இந்தியாவை சேர்ந்த நாம் தமிழர் என்ற கட்சியைச் சேர்ந்தவர்களே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என அறியவந்துள்ளது.

மலேசியாவில் விடுதலைபுலிகள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் தொடரவுள்ளோம், மஹிந்தவிற்கு பாதுகாப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கொடுத்தே உள்ளோம்.

அவரது பாதுகாப்பை குறைப்பதால் எனக்கு எந்தவித இலாபமும் இல்லை அவர் அரசியலில் இருப்பது எனக்கு நன்மையே எனவும் பிரதமர் பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் விடுதலை புலிகளா? பாராளுமன்றத்தில் சூடான விவாதம்! Reviewed by Author on September 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.