“வூசு” கலரி சர்வதேச போட்டிக்காக இந்தியாவிற்கு பயணமாகவுள்ள இலங்கை இளம் வீரர்கள்....
“வூசு” கலரி சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக வடமாகாணத்தினை சேர்ந்த 4 பேர் தெரிவாகியுள்ளதுடன், 4 பேரும் எதிர்வரும் டிசம்பர் இந்தியா மணிப்பூரிற்கு பயணமாகவுள்ளனர்.
வூசு பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் இதனை ஊடகவியலாளர்களிடம் இன்று (28) இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த வூசு பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் உட்பட பாடசாலை மாணவர்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற வூசு போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற நந்தகுமார் தனது சுயமுயற்சியின் மூலம் பயிற்றுவிப்பாளராக பலருக்கும் வூசு பயிற்சிகளை அளித்து வருகின்றார்.
2016 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் வட மாகாணம் சார்பாக 16 பேர் போட்டியில் கலந்துகொண்டார்கள்.
இதில் கொழும்பு மகரகம இந்து விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும், 3 வெள்ளி பதக்கங்களும், 3 வெண்கலப்பதக்கங்களுமாக 11 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.
தங்கப்பதக்கம் வென்ற 4 பேரும், இலங்கை சின வூசு நட்புறவு சங்கத்தினால் இந்தியாவில் மணிப்பூரில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி இந்தியாவில் வூசு சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை சார்பாக வடமாகணத்தினைச் சேர்ந்த வூசு பயிற்றுவிப்பாளரான நந்தகுமார் உட்பட இவரிடம் பயிற்சி பெற்ற பாடசாலை மாணவர்களான ரி.நாகராஜா மற்றும் என்.மனோகர் , எஸ்தர்ஷகன் ஆகிய நால்வரும் இச்சுற்று போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள இச்சுற்று போட்டிக்கு இலங்கையினை பிரதி நிதித்துவப்படுத்தும் வூசு போட்டியாளர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளனர்.
வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜாவின் வழிகாட்டல்களின் கீழ், குறித்த 4 பேரும் கள பயிற்சியை நிறைவு செய்து இந்தியாவிற்கு பயணமாகவுள்ளனர்.
குறித்த வூசு போட்டியாளர்கள் தமது பயிற்சியினை மேற்கொள்வதற்கு உபகரணங்கள் பெற்றுக்கொள்வதற்கும் சிரமத்தினை எதிர்நோக்கியவாறும் உள்ளனர்.
இப்போட்டியாளர்களுக்கு இந்தியாவிற்கு சென்று சுற்றுப் போட்டியில் இலங்கை சார்பாக தங்கப்பதக்கத்தினை வென்று வருவதற்கு பலரும் தமக்கு உதவ முன்வர வேண்டுமென்றும் போட்டியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“வூசு” கலரி சர்வதேச போட்டிக்காக இந்தியாவிற்கு பயணமாகவுள்ள இலங்கை இளம் வீரர்கள்....
Reviewed by Author
on
September 28, 2016
Rating:

No comments:
Post a Comment