அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு மார்பு புற்றுநோய் சத்திரசிகிச்சை....


இலங்கையில் முதல் முறையாக மிகவும் குறைந்த வயதுடைய சிறுமிக்கு மார்பு புற்று நோய் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

5 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று குறித்த சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுக்கவுள்ளதாகவும், அவர் மிகவும் பலவீனமாக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் தடுப்பு மாதம் என்பதனால் அதற்காக ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சுகாதாரக் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் மற்றும் இலங்கை பெண்களிடே பதிவாகும் புற்றுநோய்களில், மார்பக புற்று நோய் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

நாள் ஒன்றுக்கு புதிதாக 6 - 7 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் குனமாக்கிவிட முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தினமும் சுமார் 7 பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்

இலங்கையில் தினமும் சுமார் 7 பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக புற்றுநோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வருடாந்தம் சுமார் 2 ஆயிரத்து 500 புற்றுநோயாளிகள் புதிதாக அந்த நோயாளிகளின் வரிசையில் இணைந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பு குறித்து தெளிவுபடுத்தும் மாதத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கனிஷ்க டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 35 சத வீதமானோர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேற்குலக நாடுகளில் அதிகளவான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாகியது போதிலும் இலங்கையில் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாகி மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை விட குறைவான மரணங்களே ஏற்படுகின்றன.

மார்பக புற்றுநோய் ஏற்பட்ட பெண்கள் ஆரம்பத்தில் சிகிச்சை பெறாமல், நோய் முற்றிய பின்னர் சிகிச்சை பெற்றுக்கொள்வதால், மரணமடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மார்பகங்களில் கட்டி அல்லது திரவம் வெளியேறும் அடையாளங்கள் தென்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்வ வேண்டாம் எனவும் கனிஷ்க டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று நோய் முற்றிய நிலையில், குறிப்பிடத்தக்களவு நோயாளிகள் மகரகம வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இவர்களை சில சந்தர்ப்பங்களில் குணப்படுத்த முடியாத நிலைமை ஏற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு மார்பு புற்றுநோய் சத்திரசிகிச்சை.... Reviewed by Author on September 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.