மன்னார் விபத்தில் பலியான இளைஞர்கள்! -தப்பிச் சென்ற வாகன சாரதி பூனகரியில் கைது-Photos
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கூறாய் சீதுவிநாயகர் குளம் பகுதியில் உள்ள உள்ளக வீதி ஒன்றிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
டிப்பர் வாகனமும்,மோட்டார் சைக்கிளும் மேதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என தெரிய வந்துள்ளது.
இதே வேளை விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்ற போது பூனகரி பொலிஸாரினால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த டிப்பர் ரக வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண் ஏற்றி வேகமாக சென்ற போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் விபத்தில் பலியான இளைஞர்கள்! -தப்பிச் சென்ற வாகன சாரதி பூனகரியில் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment