மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்,,,,
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வர்த்தக சம்மேளனத்தினால் 08.09.2016 அன்று வியாழக்கிழமை கச்சேரி கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார் திணைக்களங்கள் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் பிரதேச செயலாளர் கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனம்
World
University Service of Canada (WUSC) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றினர். இதில் (WUSC) நிறுவனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் சுற்றுலாத்துறைக்கான
MiC Tourism (Mannar Improving Competitiveness in
Tourism) திட்டத்தினை முன்வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் சுற்றுலாத்துறைக்கான .......
- விளம்பர பலகை ஒன்றை நிறுவுதல்.
- இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத்துறை சார் மனித வள பயிற்சி நெறிகளை வழங்குதலும்
- தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவதும் சுற்றுலாத்துறை சார் தொழில் தருனர்களுக்கு அனுபவ அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடிய வெளிக்கள சுற்றுலாவினை ஒழுங்கு செய்தல்.
- நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு தன்னார்வு தொண்டு உத்தியோகத்தர்களைக்கொண்டு சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தல்
மன்னார் மாவட்டத்தின் தனித்துவமான சுற்றுலாத்துறை மையங்களை விளம்பரப்படுத்துவதற்கான வீடியோ ஆவணப்படமொன்றை உருவாக்குதல் போன்ற பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்,,,,
Reviewed by Author
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment