நொச்சுமோட்டையில் மயிரிழையில் உயிர்த்தப்பினார் சாரதி
வவுனியா நொச்சுமோட்டையில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியதில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த குறித்த டிப்பர் வாகனம், எதிர்த் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிட முற்பட்டபோது ஆற்றுப்பள்ளமொன்றிற்கு மேலாக அமைக்கப்பட்ட பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
கற்களை ஏற்றிச்சென்ற குறித்த டிப்பர் வாகனம், அருகிலிருந்த மரத்தில் சாய்ந்தமையால் ஆற்றுப்பள்ளத்தில் விழாமல் தப்பியுள்ளதோடு, சாரதியும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.
நொச்சுமோட்டையில் மயிரிழையில் உயிர்த்தப்பினார் சாரதி
Reviewed by NEWMANNAR
on
September 16, 2016
Rating:

No comments:
Post a Comment