விபத்துக்களை தடுக்க வேகக்கட்டுப்பாடு!
வடக்கில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு வேகக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவில் அமுல்படுத்த வேண்டியது அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத் தில் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக உள்ள 4 பிர தானமான பிரச்சினைகள் தொடர்பில் அமை ச்சர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினருடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் தற்போது போக்குவரத்து நடவ டிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ற வகையில் வீதிகளில் உள்ள சந்திகள் வளைவுகளில் வேகக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொலிஸார் அமுல்படுத்த வேண்டும். விடுவிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வீதிகளில் அநாவசியமாகவுள்ள வீதித் தடைகள் நீக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குகள் சீர்படுத்த ப்பட வேண்டும்.
அத்துடன் கஞ்சா கடத்தல் மேற்கொள்ளும் பகுதிகளை இனங்கண்டு அங்கு விஷேட பொலிஸ் மற்றும் கடற்படை காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.
விபத்துக்களை தடுக்க வேகக்கட்டுப்பாடு!
Reviewed by NEWMANNAR
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment