அண்மைய செய்திகள்

recent
-

AK 47 துப்பாக்கி ரவையால் அ..எழுத முனையும் மழலைகள்!


முள்ளிவாய்க்கால் முற்றங்களில் இன்னமும் அழிந்து விடாமல் துப்பாக்கி சன்னங்கள் ஆங்கங்கே இருக்கின்றது.

அவற்றை சிறுவர்கள் பல்வேறு கோணத்தில் ஆராய முற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் வாழும் மூன்று வயது மழலை சிறுவன் ஒருவர் முற்றத்தில் கிடந்த AK47 துப்பாக்கி ரவை ஒன்றை எடுத்து தனது தாயிடம் குட்டி பென்சில் என்று காண்பித்த சமபவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

தற்காலிக வீட்டில் வசித்து வரும் குறித்த மழலை சிறுவன் தாய் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த சமயம் முற்றத்தில் மறைந்திருந் துப்பாக்கி ரவை ஒன்றை எடுத்து தாயிடம் காட்டி அதன் தோற்றத்தை குட்டி பென்சில் என்று வர்ணித்துள்ளார்.

தனது பிள்ளை பொருள் ஒன்றை இன்னொரு பொருளுடன் ஒப்பிடும் திறனை வெளிக்காட்டியதை தனது கணவனுக்கு காண்பிக்க நினைத்து மறுபடியும் அவ்வாறு செய்ய வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றங்களில் இன்னமும் அழிந்து விடாமல் துப்பாக்கி சன்னங்கள் ஆங்காங்கே இருப்பது தொடர்பாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

AK 47 துப்பாக்கி ரவையால் அ..எழுத முனையும் மழலைகள்! Reviewed by Author on September 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.