மன்னார் நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
தெட்சினை கைலாசம்எனப்போற்றப்படும் இவ்விலங்கா தீபத்தில் மன்னார் மாவட்டத்தில் தேவாரப்புகழ் பாடப்பெற்ற சிவகுகஸ்தலங்களைக் கொண்ட கடல்களும் சூழ்ந்த பெரும்பகுதியில் நானாட்டான் எனும் திருவூரில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகோர விகார மகாதேவி ஸ்ரீ செல்ல முத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 22ம் நாள் 07-09-2016 புதன் கிழமை விசாக நட்சத்திரமும் ஸஷ்டித்திதியும் கூடிய சுபவேளையில் 10-30மணி தொடக்கம் 11-00 மணி வரையுள்ள காலத்துள் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது..
- கொடியேற்றம்-07-09-2016
- வேட்டைத்திருவிழா-13-09-2016
- சப்பரத்திருவிழா-14-09-2016
- தேர்த்திருவிழா-15-09-2016
- தீர்த்தம் தீமிதிப்பு-16-09-2016
காலை 9-00மணிக்கு அபிஷேகமும் காலை 10-00மணிக்கு ஸ்தம்பபூஜையும் பகல் 11-30 வசந்த மண்டப பூஜையும் பி.பகல்-5-00மணிக்கு யாக பூஜையும் மாலை 6-00 மணிக்கும் ஸ்தம்ப பூஜையும் இரவு 7-30 மணிக்கும் வசந்த மண்டப பூஜையும் இரவு 10-30 மணிக்கு விபூதிப்பிரசாதமும் வழங்கப்படும்…
அம்பிகை மெய்யடியார்களே திருவிழாக்களில் கலந்து கொண்டு அம்பாளின் திருவருளை பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்…

மன்னார் நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Reviewed by Author
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment