அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா இம்முறை மன்னாரில்! விருதுக்கு தெரிவு செய்யப்பட் டோர் விபரம் முழுமையாக

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் மன்னாரில் இடம் பெறவுள்ள நிலையில் சகல விதமான ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் பூர்த்தியடைந்துள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

குறித்த விழா தொடர்பாக ஆராயும் இறுதி கூட்டம் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா எதிர் வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் மன்னாரில் இடம் பெறவுள்ளது.

அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களும் மாலை 2 மணி முதல் மன்னார் நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை இடம் பெறவுள்ள முதல் நாள் நிகழ்வு அலெக்ஸ்சாண்டர் அலெக்ஸ் அரங்கில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை மாலை சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

அன்றைய தினம் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் குறித்த இரு தினங்கள் காலை 9 மணிமுதல் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் ஆய்வரங்கு இடம் பெறும். இதன் போது பல்வேறு நிகழ்வுகள்,விருதுகள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


விருதுக்கு தெரிவு செய்யப்பட் டோர் விபரம் முழுமையாக


வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா இம்முறை மன்னாரில்! விருதுக்கு தெரிவு செய்யப்பட் டோர் விபரம் முழுமையாக Reviewed by NEWMANNAR on September 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.