ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டையே திணற விடுவேன்: பிரபல கிரிக்கெட் வீரரின் பரபரப்பு பேட்டி!
கிங் ஆப் சிக்ஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் கூறியதாவது, தனது சுயசரிதை புத்தகமான சிக்ஸ் மெஷின் போல் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் சுயசரிதை புத்தகம் வெளியானால் அதற்கு கூல் கேட் என பெயர் சூட்டலாம் என கூறியுள்ளார்.
மேலும், ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டிற்கும் தனக்கும் 100 மீற்றர் ஓட்டப்பந்தயம் வைத்தால், தான் 9.57 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து போல்ட்டை வீழ்த்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.
100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கடந்த 2009ம் ஆண்டு உசைன் போல்ட் 9.59 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டையே திணற விடுவேன்: பிரபல கிரிக்கெட் வீரரின் பரபரப்பு பேட்டி!
Reviewed by Author
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment