இஸ்லாமியர்களுக்கு வேலை வாய்ப்பை மறுக்கும் ஜேர்மனி: ஆய்வில் தகவல்
ஜேர்மனியில் உள்ள நிறுவனங்கள் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு ஒன்றை சமீபத்தில் ஜேர்மனியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் 1500 நபர்களின் வேலைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த குறித்த பல்கலைக்கழகம், அதில் Sandra Bauer என்ற பெயர் கொண்ட நபர்களுக்கு 18.8% வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், Meryem Ozturk என்ற இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு 13.5% மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி Meryem தனது புகைப்படத்தில் தலை மூடியிருந்தமையால் 4.2% நிறுவனங்கள் மட்டுமே அவரை வேலைக்கான நேர்முகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஜேர்மனியில் தற்போது நிலவும் அரசியல் சமூக சூழலை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டு மட்டும் ஜேர்மனியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். மட்டுமின்றி துருக்கியர்கள் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜேர்மனியில் உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு வேலை வாய்ப்பை மறுக்கும் ஜேர்மனி: ஆய்வில் தகவல்
Reviewed by Author
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment