அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே மிக விலையுயர்ந்த வைரம்! பிரான்ஸ் மக்களுக்காக!


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற கண்கவர் வைர கண்காட்சியில் உலகின் மிக விலையுயர்ந்த வைரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டின் நகை தயாரிப்பாளரான De Grisogono என்பவர், உலகின் மதிப்புமிக்க வைரத்தை பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைத்தார்.

உலகின் மிக மதிப்புமிக்க, தீட்டப்படாத 813 காரட் கொண்ட இந்த வைரம், சுமார் 420 கோடி ரூபாய்க்கு De Grisogono வாங்கியுள்ளார். இந்த வைரத்திற்கு ‘Constellation.’ என பெயரிடப்பட்டுள்ளது.

கனடிய சுரங்கத் தொழிலாளி Lucara, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போட்ஸ்வானாவில் இந்த வைரத்தை வெளிக்கொண்டு வந்து விற்பனை செய்தார் என்பது நினைவுக் கூரதக்கது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வைர வியாபாரிகள், நகை ஆர்வலர்கள் இந்த உயர் ரக வைரத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

உலகிலேயே மிக விலையுயர்ந்த வைரம்! பிரான்ஸ் மக்களுக்காக! Reviewed by Author on September 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.