அண்மைய செய்திகள்

recent
-

இனி செரினா நம்பர் ஒன் இல்லை: இவர் தான் நம்பர் ஒன்....


உலகின் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்சை பின்னுக்கு தள்ளி ஏஞ்செலிக் கெர்பர் முதலிடத்தை பிடிக்க உள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜேர்மனியை சேர்ந்த Angelique Kerber ம், செக்குடியரசின் Karolina Pliskova வும் மோதினர்.

இதன் ஆரம்பத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய Angelique Kerber 6-3, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் Karolina Pliskova ஐ வீழ்த்தி. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தினார்.

இதற்கு முன்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா ஒபன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலகதரவரிசையில் உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையாக திகழ்ந்து வந்தார்.


தற்போது அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான செரினா வில்லியம்சை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க உள்ளார்.

Angelique Kerber கூறுகையில், தன்னுடைய கனவுகள் அனைத்தும் நினைவாகி விட்டதாகவும், இந்த ஆண்டின் இரண்டாம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளேன். இதை கூறுவதற்கு தன்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.


மேலும் 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் அமெரிக்க ஒபன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து 186 வாரங்களாக உலகத்தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்த செரினாவின் ஆதிக்கம் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி செரினா நம்பர் ஒன் இல்லை: இவர் தான் நம்பர் ஒன்.... Reviewed by Author on September 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.