அண்மைய செய்திகள்

recent
-

சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்.....


கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்டகார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசியல் வாதிகளின் போலிமுகங்களைத்தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும்கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின்சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்புவதாகத் தனது இறுதி உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.

உக்ரேன் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாகவயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழக்க வேண்டிஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குடும்பஉறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்..... Reviewed by Author on September 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.