தொடரும் வன்முறை! பெங்களூருவில் 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு!
பெங்களூருவில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த காமாட்சிபாளையா, கெங்கேரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக இடையே காவிரி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் பெங்களூரில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடைய கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான 65 பேருந்துகளை கன்னட வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நெளமங்களா பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட 4 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், பெங்களூருவில் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமாட்சிபாளையா, கெங்கேரி, பைத்தராயன்புரா, விஜய்நகர், ராஜாஜிநகர், ஆர்எம்சி யார்டு, யஷ்வந்த்புரா, நந்தின் லே அவுட், ஜனபாரதி, ராஜகோபால் நகர், மகடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடரும் வன்முறை! பெங்களூருவில் 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு!
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:

No comments:
Post a Comment