அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் மரணம்.



மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்hணம் அருகல் மடம் பகுதியைச் சேர்ந்த தவராஜா நிரோசன் (வயது-20) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

-மன்னாரில் இருந்து யாழ் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது நாயத்து வழி பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் நீண்ட தூரம் ஓடிய நிலையில் விபத்திற்குள்ளாகியது.

-இதன் போது குறித்த இளைஞன் மோட்டார் சைக்கலில் இருந்து தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுக்கு உள்ளானர்.
-உடனடியாக அப்பாதையூடாக வந்த முச்சக்கர வண்டியில் குறித்த இளைஞன் ஏற்றப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த இளைஞன் உயிரழந்தார்.

குறித்த சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் மரணம். Reviewed by NEWMANNAR on September 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.