மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீரிணைப்பு வழங்க நடவடிக்கை.-Photos
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன் னெடுக்கப்பட்ட உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத்திட்டத்திற்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் எழுத்தூர் நீர்த்தாங்கியிலிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு உள்ளக குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக தாழ்வுபாடு, பட்டித்தோட்டம்,கீரி, தாராபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளடங்களாக நீர் இணைப்பிணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே புதிய நீர் இணைப்பினை பெற விரும்புவோர் தங்களது பகுதியிலுள்ள கிராம அலுவலகர் அல்லது மன்னாh தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் தொடர்பு கொண்டு இணைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று புதிய நீரிணைப்பினை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீரிணைப்பு வழங்க நடவடிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 14, 2016
Rating:

No comments:
Post a Comment