அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -09-09-16 --மதம் மாறுவது சரியா? மாறினால் என் வாழ்க்கை மாறுமா?


கேள்வி:−  

போற்றுதலுக்குரிய சட்டத்தரணி சுதன் sir! நான் (×−×−×−×)இருந்து லவக்குமார்.sir நான் காதலித்து திருமணம் பண்ணிய என் மனைவி (×−×−×)மதம். ஆனால் திருமணத்தின் பின் அவரவர் அவரவரது மதத்திலிருப்பதாகவே முடிவெடுத்தோம். ஆனால் திருமணத்தின் பின் என் மனைவி என்னையும் அவள் மதத்திற்கு "வரும்படி வற்புறுத்துகிறாள்" ஆனால் என்னால் அது முடியவில்லை. இதனால என்னோடு எந்த விடயத்திற்கும் ஒத்துழைப்பதில்லை. என்னை, என் குடும்பத்தாரை பிசாசு என்கின்றாள். தொலைக்காட்சி,வானொலி,பத்திரிகை, சமூகவலைத்தளங்கள் . என்று எதனையும் வாசிப்பதில்லை. பிள்ளைகளுக்கும் அதே நிலைமைதான். இதனால நான் மன உளைச்சலிலுள்ளேன். நான் மதம் மாறுவது சரியா? மாறினால் என் வாழ்க்கை மாறுமா? இதற்கான சரியான பதிலினை தாருங்கள்.


பதில்:−

அன்பான சகோதரரே! தாங்கள் மதம் மாறினால் தங்களது வாழ்க்கை சமநிலை மாற வாய்ப்புள்ளது. தங்களுக்கு சற்று விளக்கமாகவே கூறுகிறேன். மனிதன் என்பவன் அடிப்படையில் கிரிமினல் (மிருக தனம்). மதம் என்பது மிருகங்களாக இருந்த மனிதனை ஒரு நியதிக்குள் வைத்துக் கொண்டு அவனை குற்றச் செயல் செய்யாது தடுக்கவே தோற்றுவிக்கப்பட்டதாகும். எவ்வளவுதான் அரசானது கொடூரமான தண்டனைகளை வழங்கினாலும் மனிதனை கட்டுப்படுத்த முடியாது. காரணம் ஒருவன் தன் மனதில் எதை நினைக்கிறானோ அதுவே அவனுக்கு ஒழுக்கமாக இருக்கும். உதாரணமாக கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்தவனுக்கு மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் பண்ணுவது குற்றமாக தெரியும். மாறான சமூகத்தில் பிறந்தவனுக்கு இரண்டாவது திருமணம் பண்ணுவது குற்றமாக தெரிவதில்லை. இப்படிப்பட்ட கிரிமினல் இயல்புள்ள மனிதனை கட்டுப்படுத்தி ஒழுக்கமான சூழலில் வைத்திருக்க தோற்றுவிக்கப்பட்டதே மதமாகும். இன்று உலகிலுள்ள 722கோடி மனிதர்கள் அனைவருமே தொடர்பிலுள்ளனர். அந்தளவிற்கு நவீன காலம். ஆனால் ஆரம்ப காலத்தில் அவ்வாறு அனைத்து மனிதர்களுக்குமிடையே தொடர்பு இருக்கவில்லை. மனிதன்,தன்னை சூழவுள்ள மனிதர்களைக் கொண்டு தமக்கான ஒழுக்கத்தினை வகுத்துக் கொண்டான். அதற்காக அவன் சக்திமிக்க கடவுள் என்ற உருவமற்ற சக்தியை தோற்றுவிக்கின்றான். இந்த ஒழுக்கம் அன்றைய காலத்தில் மனிதன் மனிதனை நெருங்கக் கூடிய பிரதேசத்தில் மட்டுமே சாத்தியப்பட்டது. ஆனால் வேறு பிரதேசத்தில் வேறு வகையான ஒழுக்கத்தினை உருவாக்கிய மனிதர்கள் அவர்களுக்கான வேறொரு மதத்தினை,கடவுளினை உருவாக்கினார்கள். இவ்வாறாக பல மனிதக் குழுக்கள் தமக்கான பல மதக் கருத்துக்களை உருவாக்கினார்கள். அதற்கு அந்ததந்த மத பற்றாளர்கள் வலியை சேர்த்து,வளர்த்ததே இன்றைய மதங்கள்.
மனிதனின் இயல்பு மூன்று வகை.
1.நம்புவது
2.நம்பாதது
3.நம்புவதும்,நம்பாதிருப்பதுவும்
நம்புதல்,நம்பாதிருத்தல் எனும் இயல்புள்ள மனிதர்களை அறிவாளிகளாவார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு.ஆனால் நம்புவதும்,நம்பாதிருப்பதுமான இயல்பினரே மூடர்களாவார்கள். இவர்களே உலகில் மிக மிக அதிகளவில் உள்ளனர். இவர்களை சமயத்தவர்களாக,மூட நம்பிக்கையுள்ளவர்களாக உள்ளனர். இவர்களை எவரும் இலகுவில் மூளைச்சலவை செய்ய முடியும். எதை சொன்னாலும் இலகுவில் நம்பிவிடுவர்/நம்பாதுவிடுவர். "எண்ணிக்கையில் எவர் அதிகவோ அவரது கருத்துக்களே எடுபடும்". இதனால் இவர்களுடைய கருத்துக்களே உலகில் மலிந்து காணப்படுகிறது. இவர்களே இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

ஒரு இடத்தில் அருகருகே இரு மதஸ் தலங்கள் உள்ளன. ஒரு மதில் மட்டுமே அவற்றை பிரிக்கின்றது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் ஏன் ஒரு மதில் மட்டும் பிரிவாக இருக்க வேண்டும்? எதிர் தரப்பினரை ஒரு செக்கனில் தன்னுடன் சேர்த்திருக்கலாம்தானே? அவ்வாறு சேர்க்க வல்லமை இல்லையெனில்...சக்தி கடவுளுக்கா? அல்லது அந்த மதிலுக்கா உள்ளது?
உலகில் அதிகமாக மதத்தினை நெறிமுறை தவறாமல் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இஸ்லாமியர்கள்தான் உலகில் அதிகமாக கொல்லப்படுகின்றனர். சரி அது கடவுளால் அன்றி, மனிதனால் கொல்லப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம், இயற்கையே கடவுள் என்கின்றனர். உலகில் அதிகமான இஸ்லாமியர்கள்(38.69கோடி)வாழும் நாடு இந்தோனேசியாவில்தான் சுமாத்திரா தீவுள்ளது. அதனை ஏன் கடவுள் அங்கு கொண்டு பூமியின் நடு மையத்தினை வைத்தார்? பூமியின் நடு மையத்திலிருந்துதானே பூமி நகர்வு ஆரம்பிப்பதுவும், முடிவடைவதும் நடைபெறும். இது கடவுளுக்கு தெரியாதா?

அன்பான சகோதரரே இது கேள்வி பதில் என்பதனால் அதிகம் எழுத முடியாது. எனவே சுருக்கமாக சொல்லுகிறேன். மத விடயத்தில் நீங்கள் கடுமையாகவே இருந்தாகவேண்டும் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இது ஒருவரின் தனிப்பட்ட மதவழிபாட்டு உரிமை மட்டும் அல்ல. இதில் குழந்தைகளுக்கு எந்தவகையான இளமைப்பருவத்தை, எந்தவகையான வீட்டுச்சூழலை, எந்தவகையான எதிர்காலத்தை நாம் அளிக்கிறோம் என்ற விஷயம் உள்ளது. ஒரு குடும்பத்தின் முதல் நோக்கமே குழந்தைகளுக்கு வீட்டில் உரிமையினை அளிப்பதுதான். உரிமை இருக்கும் இடத்தில்தான் அறிவு வளரும்(பெண்களுக்கு உரிமையுள்ள ஐரோப்பாவில்தான் பெண் சாதனையாளர்கள் அதிகம்.இஸ்லாமிய அரசுகளில் பெண்களுக்கான உரிமையில்லை. அதனால் அங்கு (பெண் சாதனையாளர்கள் இல்லை) குடும்பம் என்ற அமைப்பு உருவானதே மனிதர்களுக்கு நீண்ட குழந்தைப்பருவமும் கல்விக்காலகட்டமும் இருப்பதனால்தான். எந்த உயிர்களுக்கு நீளமான இளமைக்காலமும் மரபான ஞானத்தை கற்றாகவேண்டிய தேவையும் உள்ளதோ அவற்றில் எல்லாம் குடும்ப அமைப்பு உள்ளது. சிம்பன்ஸிக்கள், டொல்ஃபின்கள் முதல் உதாரணம் காட்டலாம். மனிதனும் அப்படியே.

ஏதேனும் தனிப்பட்ட கிறுக்குகளினால் குழந்தைகளின் வாழ்க்கையை துன்பமயமாக்க எவருக்கும் உரிமை இல்லை. சமீபத்தில் ஒரு (×−×−×) நண்பரை நேரில் இதைப்பற்றி பேசினார். அவரது மனைவி (......)ஆக மாறிவிட்டார். [அவர்களுக்குத்தான் அந்த அபாயம் அதிகம்] குடும்பத்தில் கணநேரம் கூட மகிழ்ச்சி நிலவ அவர் விடுவதில்லை. எந்நேரமும் அழுகை, ஓயாத பிரார்த்தனை. குழந்தைகள் விளையாடுவது சிரிப்பது கதைபடிப்பது தொலைக்காட்சி பார்ப்பது எதையுமே அனுமதிப்பதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் சொன்னேன் பேசிப்பாருங்கள் , முடியவில்லை என்றால் சில காலம் பிரிந்திருங்கள்.பிரிவு துயரே அவளை மாற்றும்(மனநோயாளியுடன் வாழ்வதனை விட சிலகாலம் பிரிந்து வாழ்வது நல்லது) என்றேன்.அதன்படி அவரும் பிரிந்து சில காலம் நிம்மதியாக வாழுகின்றார்.(தற்சமயம் அந்த பெண் குறித்த மதத்தினருக்கு எதிரான பிரச்சாரத்திலுள்ளார்) உங்கள் மனைவியின் மனச்சிக்கலுக்காக குழந்தைகளை மனநோயாளிகளாக ஆக்க உங்களுக்கு அனுமதி இல்லை. இந்தத் திடம் தேவை என்றே நினைக்கிறேன். ஏதோ ஒரு பலவீனத்தில் பல கணவர்கள் மனைவியின் பிடிக்குள் விழுகிறார்கள். அது அவர்களின் குடும்பத்தையே இருளில் தள்ளிவிடுகிறது.

வேலையில்லாதவர்களே மதம் மாறி கொண்டு திரிவார்கள். காரணம் வேலையில்லையெனில் வருவானம் இல்லை. வருமானம் இல்லையெனில் கடவுள் தந்த மனைவியாக இருந்தாலும் பிரச்சனை படுவாள். அது இல்லற வாழ்க்கையில் மன அமைதியினை சீர்குலைக்கும். இந்த நிலையில் எங்கிருந்தோ ஒரு பிசாசு மதம் என்ற போர்வையில், வந்து உன்னை அதற்குள் இணைத்து உதவிகள் புரியும். உனக்கும் வேலையில்லாக் குறை இல்லாது வாழ வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் ஒரு நாளும் கடவுளை காண மாட்டீர். பின் உதவி நிறுத்தப்பட்டால்தான் இரு சாராரதும் சுயரூபம் வெளிவரும். பின் அதுவுமற்ற, இதுவுமற்ற நிலைதான்.எனவே சகோதரரே "நீ கணவன் என்ற அதிகாரத்தினை எடுக்காவிடின் உன் குடும்பத்தில் ஆரோக்கியம் கெட்டுவிடும்". அதனை உடனடியாக செய்யவும். இல்லை சில காலம் பிரிந்திருப்பதே மேலானது.இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.இது மதத்திற்கு எதிரானதல்ல.மனித வாழ்க்கைக்கு சாதகமானதாகும்.(நான் இந்த உண்மையினை உலகறிய கூறினாலும்,நான் இன்று வெள்ளிக் கிழமை என்பதனால் ஆலயத்திற்கு சென்று வணங்கத்தான் போகிறேன்.காரணம் மனிதன் வகுத்த ஒழுங்கிற்கு நானும் கட்டுப்பட்டவன்.நான் மட்டும் கிரிமினலாக வாழ விரும்பவில்லை.இதுவே சகலருக்குமான நியதி.


இன்றைய கேள்வி பதில் -09-09-16 --மதம் மாறுவது சரியா? மாறினால் என் வாழ்க்கை மாறுமா? Reviewed by NEWMANNAR on September 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.