அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள மரக்காலையில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் வவுனியாவில் வைத்து கைது-ஒரு தொகை பணமும் மீட்பு.-Photos

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் கடந்த புதன் கிழமை(7) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றினுள் கடந்த புதன் கிழமை(7) இரவு உற்சென்ற குறித்த நபர் குறித்த மரக்காலையினுள் வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மரக்காலையின் உரிமையாளர் நேற்று(8) வியாழன் காலை தனது வர்த்தக நிலையத்தில் பெரும் தொகை பணம் திருடப்பட்டமை குறித்து உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் தற்காலிக தலைமையக பொறுப்பதிகாரி பிரசன்ன பரனமன்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையில்,உப பொலிஸ் பரிசோதகர் கே.வினோத்,பொலிஸ் கொஸ்தபில்களான திஸாநாயக்க(29956) சிவராஜ்(53207),சரவணண்(64646), ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித விசாரணைகளின் போது திருட்டுச்சம்பவம் இடம் பெற்று 24 மணி நேரத்தில் குறித்த நபரை நேற்று(8) வியாழக்கிழமை இரவு வவுனியா வைரவர் புளியங்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவரிடம் இருந்து மிஞ்சிய 4 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரனைகள் இடம் பெற்று வருவதாகவும்,விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் மேலும் தெரிவித்தார்.





மன்னாரில் உள்ள மரக்காலையில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் வவுனியாவில் வைத்து கைது-ஒரு தொகை பணமும் மீட்பு.-Photos Reviewed by NEWMANNAR on September 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.