ஒபாமாவை திட்டியதால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ கடுமையாக திட்டியதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்த பெரும் நிதியை உலக கோடீஸ்வரர்கள் திரும்ப பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த திங்கள் அன்று நடந்த கூட்டம் ஒன்றில் பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டங்களை ஜனாதிபதி ஒபாமா விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
ஒபாமாவின் கருத்தால் ஆத்திரம் அடைந்த ரோட்ரிகோ, ஒபாமாவை ‘விலைமாதுவின் மகன்’ என விமர்சித்து கடுமையாக சாடியுள்ளார்.
ரோட்ரிகோவின் இந்த மோசமான விமர்சனத்தை உலக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், ஒபாமாவை திட்டியதை கண்டித்து பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்திருந்த பெரும் நிதியை வெளிநாட்டு கோடீஸ்வரர்கள் திரும்ப பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சுமார் 58 மில்லியன் டொலர் நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 333 மில்லியன் டொலர் மதிப்பான சொத்துக்கள் உடனடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டு பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவிற்கு தற்போது அந்நாட்டு பங்குச் சந்தை 1.3 சதவிகிதத்திலிருந்து 7,619.10 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து பங்குச் சந்தை வல்லுனரான ஜோனத்தன் ராவேல்ஸ் பேசுகையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மோசமான விமர்சனங்கள் தான் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்றும், இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை பெருமளவில் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவை திட்டியதால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு தெரியுமா?
Reviewed by Author
on
September 08, 2016
Rating:

No comments:
Post a Comment