உயிருக்கு போராடிய வாலிபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பிரித்தானிய இளவரசர்.....
பிரித்தானிய நாட்டில் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடிய வாலிபரை அந்நாட்டு இளவரசரான வில்லியம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Letchworth என்ற நகரில் நேற்று 22 வயதான நபர் ஒருவர் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவல் உடனடியாக இளவரசரான வில்லியமிற்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் தனது மருத்துவ வசதி உள்ள ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
தரையில் ஹெலிகொப்டர் இறங்கியதும் அதில் இளவரசர் வில்லியம் இருக்கிறார் என்ற தகவல் பரவியதும் அங்கு கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சில நிமிடங்களுக்கு பிறகு ஹெலிகொப்டர் விட்டு வெளியே வந்த இளவரசர் அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து கையை ஆட்டிவிட்டு மீண்டும் உள்ளே சென்று அமர்ந்துக்கொண்டார்.
அப்போது, இளம்பெண் ஒருவர் ஹெலிகொப்டர் முன்னர், சென்று ‘வில்லியம், நான் உங்களை காதலிக்கிறேன்’ என உரக்க கத்தியுள்ளார்.
உடனடியாக அங்கு வந்த காவலர்கள் அப்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், ஒரு குடியிருப்பில் கத்தி குத்து காயம் அடைந்துள்ள வாலிபர் ஒருவர் ஹெலிகொப்டரில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
உயிருக்கு போராடிய வாலிபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பிரித்தானிய இளவரசர்.....
Reviewed by Author
on
September 08, 2016
Rating:

No comments:
Post a Comment