பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் இல்லை- மன்னாரில் அருட்தந்தை மா.சத்திவேல்-Photos
பயங்கரவாத தடைச்சட்டமே ஒரு பயங்கரவாத தடைச்சட்டமாக உள்ளது.இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தவர்கலே ஒரு பயங்கரவாதிகள்.பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு அவர்கள் பல்வேறு சிறைகளிலே அடைக்கப்பட்டுள்ளார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (22) காலை மன்னார் பஸார் பகுதியில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,
இந்த நாட்டிலே யார் பயங்கரவாதிகள்? யுத்தம் முடிவடைந்த பின்னரும் எமது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளவர்கள் பயங்கரவாதிகள்.அது போன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் தங்களுடைய தனியார் நிலங்களிலே புத்த விகாரைகளை அமைக்கின்றவர்கள் பயங்கரவாதிகள்.புத்தர் சிலைகளை அமைக்கின்றவர்கள் பயங்கரவாதிகள்.எமது கடல்வளத்தை அள்ளிக்கொண்டு போகின்றவர்கள் பயங்கரவாதிகள்.
இவர்களை எல்லாம் தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என கூறுகின்றோம்.ஆனால் எங்களுடைய பிள்ளைகள் இந்த மண்ணைக்காப்பாற்றுவதற்காக,மக்களின் உரிமைகளை காப்பாற்றுவதற்காகவும்,எதிர்கால அரசியலை தீர்மானிப்பதற்காகவும் அவர்கள் முன் வந்தவர்கள்.
அவர்களை எல்லாம் கடந்த கால அரசாங்கம் பயங்கரவாதிகள் என்று கூறி இருக்கின்றனர்.அது மட்டுமல்ல கடந்த காலத்திலே ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் விடுதலை இயக்கத்திற்கு பணம் கொடுத்திருக்கின்றார்.
ஆயுதம் கொடுத்திருக்கின்றார்.அவர் பயங்கரவாதி இல்லையா? ஆவர் செய்தது அரசியலா? அதே போன்று மஹிந்த ராஜபக்ஸ் தமிழ் விடுதலை இயக்கத்திற்கு கோடி கணக்காக பணம் கொடுத்திருக்கின்றார்.
அவரை பயங்கர வாதி என கூறாத தெற்கு முற்போக்கு சக்திகள் அவரை பஙக்கர வாதி என கூறக்கூடாதா?
தெற்கின் மண்ணுக்காக இந்த தேசத்தின் பற்றாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் ஏன் எங்களுடைய மண்ணுக்காகவும்,தமிழ் மக்களின் அரசியலுக்காக போராடியவர்களை மட்டும் ஏன் பயங்கரவாதிகள் என கூறுகின்றனர்.
எனவே இந்த நாட்டிலே எங்களை பொறுத்த மட்டிலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள்.
பயங்கரவாதிகள் வெளியில் இருக்கின்றார்கள்.அவர்களை கைது செய்யுங்கள்.இனவாத கருத்துக்களையும்,மதவாத கருத்துக்களையும் கூறிக்கொண்டு இருப்பவர்கள் பங்கரவாதிகள்.எமது மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பவர்களும் பயங்கரவாதிகள்.எனவே அவர்களை கைது செய்யுங்கள்.அவர்களை பயங்கரவாதி என கூறுங்கள்.
-இங்களுடைய பிள்ளைகளையும்,எமது மக்களையும் விடுதலை செய்யுங்கள்.எங்கடைய அரசியல் எதிர் காலத்தை தீர்மானிப்பதற்கு எமக்கு சுய நிர்ணய உரிமையை தாருங்கள்.என கேற்கின்றோம்.இந்த நிலையிலே எவ்வித விசாரனைகளும் இன்றி பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்தோம்.
-குறித்த கையெழுத்து போராட்டம் இன்று வியாழக்கிழமை(22) மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கொரி.இப்பிரச்சினை தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல.
மாறாக இந்த நாட்டின் அரசியல் பிரச்சினை.இந்த நாட்டின் தேசிய பிரச்சினை.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கையெழுத்து வேட்டையின் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,ஆயரின் செயலாளர் எஸ்.முரளிதரன்,மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர் அந்தோனி சகாயம்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், உற்பட அரசியல் கைதிகளின் உறவினர்கள்,காணாமல் போனவர்களின் உறவினர்கள்,பொது அமைப்பினர் என பலர் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் இல்லை- மன்னாரில் அருட்தந்தை மா.சத்திவேல்-Photos
Reviewed by NEWMANNAR
on
September 22, 2016
Rating:

No comments:
Post a Comment