இன்றைய கேள்வி பதில் - 23.09.2016
கேள்வி:-
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் சார்!நான் தமிழ் நாட்டிலிருந்து பரமேஷ்வரி.சார் நான் மகளிர் சுய உதவிக்குழு துவக்க ஆசைப்படுகிறேன்.அதன் மூலம் நானும் என்னை சார்ந்த பெண்களினதும் வாழ்க்கை மேன்பாட்டிற்காக பாடுபடப் போகிறேன்.எனவே நான்"மகளிர் சுய உதவிக் குழு" துவக்க யாரை அணுகவேண்டும்? என்ன பண்ண வேண்டும் சார்?
பதில்:-
அன்பான சகோதரியே தமிழ் மாநில அரசு மகளிரின் மேன்பாட்டிற்காக நேரடியாக உதவி செய்வதன் மூலம் ஊழல் இடம்பெறுவதனால்,மகளிர் சுய உதவிக் குழுக்களை அப் பிரதேசத்தில் உள்ள,அப் பிரதேசத்தில் வாழும் பெண்களை இணைத்து அவர்கள் மூலமாக குழுக்களை உருவாக்கி அதன் மூலம் மகளிர்களுக்கான உதவிகளை வழங்குகிறது.
இதனால் நீங்கள் அவ்வாறானதொரு "மகளிர் சுய உதவிக்குழு"தொடங்க வழி செய்கிறது.இதன் படி நீங்கள் ஒரு சுய உதவிக் குழு தொடங்குவதற்கு,குறைந்தது 12 முதல் அதிகபட்சம் 20 மகளிர்களை கொண்ட குழு கட்டாயம்.அனைவரும் ஒரே பகுதியினராக இருக்கவேண்டும்.மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ‘திட்ட அலுவலர்,மகளிர் திட்டம்’ என்ற தனிப்பிரிவு இருக்கும்.அவர்களின் கீழ் ‘மகளிர் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்’இருக்கும். அந்த தொண்டு நிறுவனங்கள்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வழி நடத்தும்.குழு தொடங்கியதும் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஊக்குனருக்குத் தனிப் பயிற்சியும்,உறுப்பினர்களுக்கு தனிப் பயிற்சியும் வழங்கப்படும்.ஒரு குழுவுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சுழல் நிதி வழங்கப்படும்.அதில் 10 ஆயிரம் ரூபாய் திரும்பச் செலுத்த தேவை இல்லாத மானியம்.உடனடியாக,உங்கள் மாவட்டத்தின் மகளிர் திட்ட அலுவலரை அணுகி "மகளிர் சுய உதவிக் குழு தொடங்குவதற்கான வழிவகையினை செய்யுங்கள்.
இன்றைய கேள்வி பதில் - 23.09.2016
Reviewed by NEWMANNAR
on
September 23, 2016
Rating:

No comments:
Post a Comment