மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்ன வெட்டுவான் கிராம மக்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கை.-PHOTOS
மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்ன வெட்டுவான் கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களை மீண்டும் சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்ய மீள் குடியேற்ற அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து வாழுந்து வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக புராதன பன்னவெட்டுவான் கிராமத்தில் உள்ள புனித அந்தோனியார் அபிவிருத்திச் சங்கம் வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் இன்று திங்கட்கிழமை (12) காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மீள் குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரின் பிரதி ஒன்றையே வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் வைபவ ரீதியாக கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்ன வெட்டுவான் கிராமம் சுமார் 200 வருடங்களுக்கு முன்பதாக தோற்றம் பெற்ற புரதான கிராமமாகும்.
அன்றைய காலத்தில் குறித்த கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்த நிலையில் அந்த மக்கள் குறித்த கிராமத்தில் விவசாயச் செய்கை மற்றும் கால் நடைகளை வளர்த்து தமது வாழ்வாதராத்தை மேம்படுத்தி வந்தனர்.
1958ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் இடம் பெயர்ந்து மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மீள் குடியேறினர்.
எனினும் காலத்திற்கு காலம் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திற்குச் சென்று தமது காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்ட தோடு, கால் நடைகள் வளர்ப்பு மற்றும் பராமறிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வன் செயல் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான 15 வருடங்கள் குறித்த கிராமம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தமையினால் குறித்த கிராமம் எது விதமான அபிவிருத்தியும் செய்ய முடியாத நிலையில் குறித்த கிராமம் மிகவும் பாதீக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
மேலும் குறித்த கிராமத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட பல தடையங்கள் காணப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலை கட்டிடம்,ஆசிரியர் விடுதி கட்டிடம்,மரணித்த முன்னோர்களை அடக்கம் செய்த அடக்கஸ்தளம் போன்றவை சிதைவுகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது.
-மேலும் எனது கிராமத்திற்கான புனித அந்தோனியார் ஆலயமும் காணப்படுகின்றது.
எனவே குறித்த கிராமத்தில் வாழ்ந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீள் குடியோறி வாழ விரும்புகின்றனர்.
எனவே எமது கிராமத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.
குறிப்பாக எமது கிராமத்திற்கான ஆலயம் திருத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்படல்,கிராமத்திற்கான குடி நீர் மற்றும் குழாய்க் கிணறு அமைத்தல்,காணிகளை புனரமைப்புச் செய்தல்,இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்தல்,குறித்த கிராமத்தில் காணப்படும் குளங்கள் புனரமைப்பு செய்தல் மற்றும் வாய்க்கால்கள் திருத்தல்.காட்டு மிருகங்களின் தாக்குதல்களில் இருந்து பயிர்ச் செய்கைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
எனவே பன்ன வெட்டுவான் கிராம மக்களாகிய நாங்கள் முன்வைத்துள்ள சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை பெற்று மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ள குறித்த கிராமத்திற்கு சகல அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளுமாறு குறித்த கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பன்ன வெட்டுவான் கிராம மக்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கை.-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:



No comments:
Post a Comment