அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -12-09-16

கேள்வி-
கெளரவ சட்டத் தரணி சுதன் sir அவர்களே!நான் தமிழ் நாடு கும்பகோணத்தை சேர்ந்த யோகராசு.sir நான் கட்டாரில் சாரதியாக பணி புரிகிறேன்.வெக்கேஷனில் ஊருக்கு வந்துள்ளேன்.sir நான் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விரும்புகிறேன். இதற்கு நான் என்ன பண்ண வேண்டும்?


பதில்:−

அன்பான சகோதரரே! சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், ஏற்கனவே செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். உங்கள் பகுதி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஃபோரம்4−ஏ என்ற விண்ணப்பத்தை கேட்டு வாங்குங்கள்.அதனைப் பூர்த்தி செய்வதோடு அதில் கேட்கப்பட்டு இருக்கும் ஆவணங்களுடன் (ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட்,விசா, ஆகியவற்றின் மூன்று நகல்கள்,,மருத்துவச்சான்றிதழ்,மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.சில ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வெளிநாடு செல்வது உறுதி ஆகிவிட்டதா என்பதை சரிபார்க்க விமான டிக்கெட்டையும் பரிசோதிப்பது உண்டு. சேவைக்கட்டணம் உட்பட 1,000 ரூபாய் செலுத்தவேண்டி இருக்கும். பரிசீலனைக்குப்பின் அன்றைய தினமே லைசன்ஸ் வழங்கப்படும்.அவ்வாறு சாரதி அனுமதி பத்திரம் கிடைக்காவிடின் ஆர்.டி.ஓ.அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து,அனுமதி பத்திரத்தினை பெற்று கொள்ள முடியும்..


இன்றைய கேள்வி பதில் -12-09-16 Reviewed by NEWMANNAR on September 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.