அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் ஆத்திக்குழியில் இரண்டு இரவுகளைக் கொண்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம்-Photos

மாதோட்ட புலவர் அமரர் கீத்தாம்பிள்ளை அவர்களினால் இயற்றப்பட்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம் இரண்டு இரவுகள் மன்னார் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.

நாளை புதன் கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழன் ஆகிய இரு தினங்கள் இரவு 7 மணிக்கு ஆத்திக்குழி புலவர் கீத்தாம்பிள்ளை கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.

அளவக்கை பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் றெவ்வல் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நாடக நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை , வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,மற்றும் கௌரவ விருந்தினர்களாக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எஸ்..தேசப்பிரிய,மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்ஸி டி மேல்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நாடகமானது 1798 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நிலையில் 1800 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் அரங்கேற்றப்பட்டது.

குறித்த நாடகமானது சுமார் 20 வருடங்களின் பின் மீண்டும் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில அரங்கேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் முருங்கன் ஆத்திக்குழியில் இரண்டு இரவுகளைக் கொண்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம்-Photos Reviewed by NEWMANNAR on September 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.