மாங்குளம் பகுதியில் விபத்து : தாய் பலி
முல்லைத்தீவு, மாங்குளம் - மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவர்.
உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய இரவிக்குமார் சங்கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் பகுதியில் விபத்து : தாய் பலி
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:

No comments:
Post a Comment