வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சக ஆயுள் தண்டனைக் கைதி ராஜேஷ் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பேரறிவாளன் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் தற்பொழுது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனை சந்தித்தார் அற்புதம்மாள்
பேரறிவாளன் தாக்கப்பட்டதை அறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடனடியாக வேலூர் சிறைக்கு சென்றுள்ளார்.
அங்கு பேரறிவாளனை சந்தித்து என்ன நடந்தது என கேட்டறிந்த பின்னர் சிறை அதிகாரிகளிடம் பேரறிவாளனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
அப்போது சிறைக்குள் அனுமதிக்காததால் பத்திரிகையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 13, 2016
Rating:


No comments:
Post a Comment