மன்னாரில் கையெழுத்து வேட்டை....... அம்பாறை மாவட்ட பானமை மக்களிற்காக.....
அம்பாறை மாவட்ட பானமை மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை திருப்பிக் கொடுக்க வேண்டி ஐனாதிபதிக்கு அனுப்பிவைக்க மன்னாரில் கையெழுத்து வேட்டை
பானமை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட காணி நீதியை நிலைநிறுத்துங்கள் காணியின் ஆரம்பக் குடியிருப்பாளர்களுக்கு அவர்களது காணி உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுங்கள் அத்துடன் கிராமங்களில் மீளக் குடியமர்வதற்குத் தேவையான வீடுகளை உள்ளிட்ட சகல வசதிகளையும் பெற்றுக்கொடுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்து புதன்கிழமை (28.09.2016) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன் ஐனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்காக மன்னார் நகரில் பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் லாவுகலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பானமை சாஸ்திரவெலி கிராம அலுவலகர் பிரிவில் சாஸ்திரவெலி, இறாகம்வெல, எகொடயாவ, உள்புஸ்ஸ, ஹொரெகத்த ஆகிய கிராமங்களில் மக்கள் பரம்பரை பரம்பரையாக மீனவர் மற்றும் விவசாயிகள் குடியிருந்த காணிகளை ஆயுதமேந்திய குழுவொன்றினால் 2010ம் ஆண்டு பலாத்காரமாக மக்களை விரட்டியடித்ததோடு மகிந்த ராஐபக்ச ஐனாதிபதி அவர்களின் அரசாங்கத்தினால் அவ் காணிகள் அபகரிக்கப்பட்டன.
இதனால் இவ் மக்களின் விவசாயம் மீன்பிடி மற்றும் கைத்தொழில்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் இழக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட காடுகளின் இருப்புக்கு ஏற்படுகின்ற பாதகமான தாக்கங்களின் மூலம் யானை மனித மோதல் தீவிரமடைகின்றன, மக்களின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால இருப்பு மற்றும் பாதுகாப்பு என்பன இழக்கும் அபாயங்கள் தோண்றியுள்ளன.
ஆகவே பாதிப்படைந்துள்ள இவ் மக்களின் ராஐபக்ச அரசாங்கத்தால் அபரிக்கப்பட்ட காணிகளின் உரிமையை உறுதிப்படுத்துங்கள், நாட்டின் உன்னதமான சட்டத்தின்மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக அக் காணிகளின் உரிமையை பாணமை பிரதேசத்தில் விவசாயத்தின் மூலம் வாழ்க்கை நடாத்திய மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள்
மேலும் ஐனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரும் தலையிட்டு இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இவர்களால் ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும் மகஐரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் கையெழுத்து வேட்டை....... அம்பாறை மாவட்ட பானமை மக்களிற்காக.....
Reviewed by Author
on
September 29, 2016
Rating:

No comments:
Post a Comment