சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஈழத் தமிழர்!
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற தெரிவுக்கான போட்டிகள் தற்போது அந்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில் இணையத் தேடுதளமான “யாகூ” (சிங்கப்பூர் நிறுவனம்) அடுத்த பிரதமர் யார்? என்ற கருத்துகணிப்பை அந்நாட்டு மக்கள் மத்தியில் நடத்தியுள்ளது.
இதில் சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் “லீ செயீன் லூங்” இன் வெற்றிடத்திற்கு தற்போதைய துணைப் பிரதமரான “தர்மன் சண்முகரத்னத்தை” (59 வயது) தெரிவு செய்ய அதிகமான சிங்கப்பூர் மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகணிப்பு விவரம்
தர்மன் சண்முகரத்னம் (துணைப் பிரதமர்) - 69%
தியோ சீ ஹேன்னு (துணைப் பிரதமர்) - 34%
ஹெங் சயீ கியாட் (நிதி அமைச்சர்) - 25%
சான் சுன் சிங் (பிரதமர் அலுவலக அமைச்சர்) - 24%
தான் சுவாங் ஜின் (சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சர்)-16%
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஈழத் தமிழர்!
Reviewed by Author
on
September 28, 2016
Rating:

No comments:
Post a Comment