காணாமல் போன மகனை காண ஏங்கிய தாய் மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் சாவடைவதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று மக்ஸ்வெல் பரணகம தலை மையிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன் கதறி அழுத தாய்,
அவரது கோரிக்கைகள் நிறை வடையாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பருத்தித் துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற காணாமல் போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சிப் பதிவுகளுக்கு புஸ்பநாதன் தவமணி (வயது - 76) சென்றிருந்தார்.
\'காணாமல்போன எனது மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நடக்க முடியாமல் உள்ள போதும் உறவினர்களைப் மீட்பதற்கு சாட்சியம் வழங்க வந்தேன். போரின் பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதே அவர்கள் காணாமல் போனார்கள்.
அவர்கள் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் சாவடைவதற்குள் எனது மகனைக் காண வேண்டும். கண்டு பிடித்துத் தாருங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று அந்தத் தாயார் கதறி அழுதார்.
மகன், மருமகள், பேரப்பிள்ளை களைத் தொலைத்த அவர், புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பலரது உதவியுடனேயே சாட்சியம் அளிக்க வருகை தந்திருந்தார். அவரது இறுதி ஆசை நிறைவேறாத நிலையிலேயே அவர் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
காணாமல் போன மகனை காண ஏங்கிய தாய் மரணம்
Reviewed by NEWMANNAR
on
September 16, 2016
Rating:

No comments:
Post a Comment