மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட 'பாஸ்' நடைமுறை அமுலில்-அசௌகரியங்களை எதிர் நோக்கும் உறவினர்கள்.-Photo
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் நோயளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் 'பாஸ்' நடைமுறையினை அமுல் படுத்தியுள்ளமையினால் நோயாளர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு வரும் உறவினர்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெவிரித்தளள்னர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவர்கள் எதிர் நோக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின்; தொகையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி திருமதி எஸ்.ஆர்.யூட் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதற்கு அமைவாக கடந்த சில தினங்களுக்கு முன்னார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களை மட்டுப்படுத்தும் வகையில் 'பாஸ்' நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தள்ளனர்.
குறிப்பாக நோயாளர் விடுத்தியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் ஒருவரை ஒரு நேரத்திற்கு பார்வையிடுவதற்கு 'பாஸ்' நடைமுறையில் இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாகவும், இதனால் நோயாளர்களை பார்வையிட வரும் ஏனைய உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறவில்லை எனவும்,குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலையிலும் தற்போது அமுலில் இல்லாத குறித்த நடை முறை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்களை பார்வையிட வருகின்ற உறவினர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளும்,குறைபாடுகளும் காணப்படுகின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யாத நிலையில் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களை கட்டுப்படுத்த முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கு உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட 'பாஸ்' நடைமுறை அமுலில்-அசௌகரியங்களை எதிர் நோக்கும் உறவினர்கள்.-Photo
Reviewed by NEWMANNAR
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment